ம.ராகவ்மணி, குப்பம் -ஆந்திரா

தி.மு.க.வில் புதியதாக தோன்றியுள்ள 'சுற்றுச்சூழல் அணி' குறித்து?

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரும், பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவருமான கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் சுற்றுச் சூழல் அணி உருவாக்கப்பட்டிருப்பது, காலமாற்றத்தின் நல்விளைவு. அதே நேரத்தில், தி.மு.கவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருந்தால்தான், தேர்தலில் நல் விளைவு கிடைக்கும்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

ரூ. 39.5 லட்சத்தில் டொயோட்டா பார்ச்சூனர் காரை வாங்கி ரூ.34 லட்சத்துக்கு 007 எண் வாங்கிய அகமதாபாத் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர் ஆஷிக் படேலின் ஆர்வம் பற்றி..!?

ரஜினியின் தர்மதுரை படம் ரிலீசானபோது, அந்தப் படத்தில் அவர் வரும் காட்சி போலவே, விலைப் பட்டியலுடனான சட்டை-பேண்ட், தொப்பி-ஷூ என டிக்கெட் செலவை விட பலமடங்கு செலவிட்டு டிரஸ் அணிந்து தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏராளம். ஜேம்ஸ் பாண்டுக்கு ஒரு ரசிகர்தான்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் தமிழகத்தில் ரவுடி களின் தொல்லை இல்லை என்கிறாரே செல்லூர் ராஜு?

Advertisment

பொள்ளாச்சி- சாத்தான்குளம் என ஆளுங்கட்சியும் காவல்துறையும் கூட்டணி அமைத்து ரவுடித்தனங்களை செய்வதால், தனியாக உள்ள ரவுடிகளை அமைச்சரின் கண்களுக்குத் தெரியவில்லை.

செந்தில்குமார் எம். சென்னை - 78.

செத்துப்போன மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு என சமஸ்கிருதத்தை காட்டமாக வைகோ சொல்கிறாரே?

சில ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருதத்திலான செய்தி அறிக்கையை 130 கோடி மக்களும் பார்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும் என்கிற தூர்தர்ஷனின் முடிவு, செத்த கிளிக்கு சிங்காரம் மட்டுமல்ல, உயிர்ப்புள்ள மொழிகளுக்கு பாடை கட்டும் பா.ஜ.க.வின் ரகசிய திட்டம்.

Advertisment

mavali answers

வாசுதேவன் , பெங்களூரு

அசத்திய தமிழக வீரர் நடராஜன்?

ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமான ஒரு நாள் போட்டியில் இரண்டு விக்கெட், 20ஓவர் போட்டியில் 3 விக்கெட் என இந்திய கிரிக்கெட்டில் முதன்முதலாக அசல் தமிழனின் அசாத்திய சாதனை.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன்,பெங்களூரு 77

ரஜினி கேள்விக்குறியா(?) ஆச்சர்யக் குறியா(!) முற்றுப்புள்ளியா(.) கமாவா... (,)?

அவர் கொட்டேஷன் மார்க்("'). உள்ளே யார் யாரோ நிரம்பிக்கொள்ள நினைக்கிறார்கள்.

_____________

தேர்தல் களம்

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா?

சாத்தியம்தானா என்பது ஒருபுறம், தேவைதானா என்பது இன்னொரு புறம். இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடை பெற்றபோது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் சேர்ந்துதான் நடைபெற்றது. 1967 வரையிலும் அப்படித்தான். மத்தியில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சியை எதிர்க்கும் மாநில அரசுகளை, 356வது பிரிவின் கீழ் கலைத்து விடும் ஜனநாயகப் படுகொலை போக்கைக் கையாண்டதன் விளைவாக, சில மாநிலங்களில், பொதுத் தேர்தலுக்கு முந்தைய காலத்திலேயே மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவானது. பின்னர், காங்கிரசில் பிளவு ஏற்பட்டு, மத்தியில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு அமைந்தபோது, 1971ல் நாடாளுமன்றத்திற்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. எமர்ஜென்சிக் குப் பிறகு, 1977ல் நாடாளுமன்றத் தேர்தல் முன்னதாகவும் சட்டமன்றத் தேர்தல் அதன்பிறகும் நடந்தன. இதுவே 1980லும் நடந்தது. 1984, 1991, 1996 ஆகிய தேர்தல்கள் நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்ந்தே நடைபெற்றுள்ளன. ஆனால், எல்லா மாநிலத்திலும் எல்லா காலத்திலும் இந்த நிலை இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள், கலைப்புகள், குதிரை பேரங்கள் இவற்றால் நாடாளுமன்றத் தேர்தல் ஒரு கட்டத்திலும், சட்டமன்றத் தேர்தல் இன்னொரு கட்டத்திலும் நடைபெறுவது பெரும்பாலான மாநிலங்களில் வழக்கமாக இருக்கிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பதன் மூலமாக, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங் களிலும் ஒரே கட்சியின் ஆட்சியைக் கொண்டு வந்துவிட முடியும் எனக் கருதுகிறது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் என்பது அண்மைக்காலமாக ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் அமைப்பாக மாறியிருக்கும் சூழலில், அதிகாரபலத்துடன் தேர்தலை சந்திக்கும்போது, வெற்றி எளிது எனக் கருதுகிறது பா.ஜ.க தலைமை. அதற்காக, தேர்தல் செலவைக் காரணமாக காட்டுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற் காகவும்-படேல் செலவுக்காகவும் வாரி இறைத்ததும் இதே மத்திய அரசுதான். ஒரே தேர்தல் என்பதன் மூலம் சட்டமன்றம் காலம் முடிவடை யாத மாநிலங்களிலும் மீண்டும் தேர்தல் நடத்தி, ஜனநாயகம் கொடுத் துள்ள 5 ஆண்டுகால வாய்ப்பை இழக்கச் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் செய்த தவறை சரிசெய்வது என்ற பெயரில், ஜனநாயகத்தை தன் வசப்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது நீண்ட விவாதத்திற்கும், நடைமுறை சாத்தியங்களுக்கும் பிறகு எடுக்க வேண்டிய முடிவு.